tamilnadu

கரூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

தாந்தோன்றி ஒன்றியத்தில்  செ.ஜோதிமணி தீவிர பிரச்சாரம்


கரூர், ஏப்.9- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கரூர்நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாந்தோன்றி ஒன்றியம், கரூர் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்குச்ச சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, திமுக மாநில நெசவாளர் அணிசெயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகர செயலாளர் எம்.ஜோதிபாசு, திமுக தாந்தோணி ஒன்றிய செயலாளர் ரகுநாதன் மற்றும்கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


இன்று திருச்சி காவல்துறையினர் அஞ்சல் வாக்களிக்க ஏற்பாடு


திருச்சிராப்பள்ளி, ஏப்.9- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிபுரியும் 1720 நகர்புற காவல்துறை அலுவலர்கள் அஞ்சல் வாக்களிப்பதற்கு வசதியாக ஏப்.10 ஆம் தேதி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அஞ்சல் வாக்களிக்கலாம். மேலும் ஊரக பகுதியில் தேர்தல் பணிபுரியும் 1038 காவல்துறை அலுவலர்கள் 11 ஆம் தேதி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையங்ரகத்தில் காலை 10 முதல்மாலை 5 மணி வரை தங்கள் அஞ்சல் வாக்கினை செலுத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் சிவராசு தெரிவித்துள்ளார்.



அறநிலையத்துறை கோவில் விழாவில் தலித்துக்களை நிராகரிப்பது தொடர்கிறது


கும்பகோணம், ஏப்.9-தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக முத்து மாரியம்மன் கோவிலில் அனைத்து சாதியினரும் ஒன்றாக கூடி விழா நடத்துவது வழக்கமாகும். இதற்குநிர்வாக கமிட்டியினர் அனைத்து சாதியினரும் உள்ள நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு அவ்வாலயம்கீரனூர், சித்தாடி, சித்தாலத்தூர், ஆடி புலியூர் போன்ற சுற்று கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலின் தலித் மரளாவிகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரின் நிதி உதவியுடன் நவசண்டியாக விழா நடைபெற்று வந்தது. இதில் கோயில்அமைந்திருக்கும் கீரனூர் பகுதியில் தலித் குடியிருக்கும் மாரியம்மன் கோயில் தெருவை சார்ந்தவர்கள் அக்கோயிலுக்கு மரளாவிகளாக இருந்த போதிலும் அவர்களை தொடர்ந்து நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே போல் இவ்வாண்டும் கீரனூரில் குடியிருக்கும் தலித்துகளை நிர்வாக கமிட்டியில் இணைக்காமல் இதரசாதியினர் மட்டும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு விழா நடைபெற்றது. அப்போது கீரனூரை சேர்ந்த தலித்துகள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகத்திடம் முறையிட்டனர்.(இக்கோயில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது).ஆனால் திட்டமிட்டு சில சாதி ஆதிக்க பிரிவினர் தலித்துகளை நிராகரித்து சுவாமி வீதி உலா காட்சி நடத்துவதில் பாரபட்சமாக செயல்படுவதாக தலித் மக்கள் குற்றம்சாட்டி முறையிட்டனர். தகவலறிந்து நாச்சியார்கோவில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து கலவரம் எதுவும் நடக்காமல் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியை ரத்து செய்து கோயிலைச் சுற்றி இறக்கி வைத்தனர். ஆனாலும் பொதுவாக காலம் காலமாக தலித் மற்றும் அனைத்து சாதியினரும் வழிபட்ட முத்துமாரியம்மன் கோவில் விழா கமிட்டியில் கீரனூர் தலித் மக்களும் இடம்பெற வேண்டும் என்றும், கோயில் சுவாமிகள் வீதியுலா தலித் தெருக்களுக்கும் வர வேண்டும் என கோரியுள்ளனர்.




;