tamilnadu

img

ஜன.8 வேலை நிறுத்த பிரச்சார வாயிற் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.30- மின்சார சட்டத் திருத்த மசோதா 2018 திரும்பப் பெற வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை அடை யாளம் கண்டு, ஐடிஐ படித்தவர்க ளை கொண்டு நிரப்ப வேண்டும். 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் வேலை நிறுத்த பிரச்சார வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மணப்பாறை கோட்ட சிஐடியு தலைவர் அந்தோணிசாமி தலைமை வகித்தார்.  பிரச்சாரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரங்கராஜன், வட்ட செயலாளர் செல்வராசு, தொமுச தலைவர் மலையாண்டி, தொழிலா ளர் ஐக்கிய சங்க சிவபெருமாள், தொழிலாளர் சம்மேளன அன்பு செல்வம், தொமுச வட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் பேசினர். சிஐடியு கண்ணன், ஜான்ஜோஸப் மற்றும் ஸ்டாலின், ஜாகீர்உசேன், சுப்பையா உள்பட 5 தொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலா ளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போன்று திருச்சி கிழக்கு கோட்டத்திலும் பிரச்சாரம் நடைபெற்றது.

;