tamilnadu

img

பெரம்பலூரில் சர்வதேச பால் தினம்

பெரம்பலூர், ஜூன் 1-ஜூன் 1-ம் தேதி சர்வதேச பால் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் தின விழா நடைபெற்றது. சங்கச் செயலாளர் பி.பாண்டியன் வரவேற்றார். சங்க துணைத்தலைவர் எஸ்.மாமுண்டி தலைமை வகித்தார். கூட்டுறவு சார்-பதிவாளர் பால்வளம் கோ.விஜயா, உதவி இயக்குனர் பி.மருதமுத்து ஆகியோர், பால் கறவை உறுப்பினர்கள் விளாமுத்தூர் சுப்புலட்சுமி, மாமுண்டி, நொச்சியம் ராஜாத்தி, செல்லியம்பாளையம் இராமசாமி ஆகிய 4 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டினர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி.ராமகிருஷணன், எம்.தங்கராஜ், செல்லப்பிள்ளை, சின்னையன், வெள்ளையன், மாலா, சரோஜா, தனலட்சுமி பாப்பா ஆகியோர் உள்பட சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்க எழுத்தர் நீலமேகம் நன்றி கூறினார்.