tamilnadu

சென்னை மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பு

சென்னை,மே 8-மாமல்லபுரத்துக்கு மட்டும் கடந்த 2017-ம் ஆண்டில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 25லட்சம் அதிமாகும்.மக்கள் அதிகமாக பயணம் செய்யக்கூடிய மலைப்பகுதிகளான கொடைக்கானல், கேத்தி பள்ளத்தாக்கு, ஊட்டி, குன்னூர், வால்பாறை, ஏலகிரி மலை உட்பட பல்வேறு இடங்கள் தமிழகத்தில் உள்ளன.  தமிழகத்திற்கு வரும் உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது கடந்த 2014-ம் ஆண்டில் 46 லட்சம் என்ற அளவில் இருந்தது. இது மேலும் வளர்ந்து கடந்த ஆண்டில் 48 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொட்டது. அதே நேரத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது கடந்த 2014-ம் ஆண்டில் 3,276 லட்சம் என்ற அளவில் இருந்தது. இது கடந்த ஆண்டில் மேலும் 174 லட்சம் அதிகரித்துள்ளது. மாமல்லபுரத்துக்கு மட்டும் கடந்த 2017-ம் ஆண்டில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாக இருந்தது. இது கடந்த 2014-ம் ஆண்டில் 1 கோடியே 25 லட்சமாக இருந்தது. தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சியை புரிந்துகொண்டுள்ள நிலையில், ஈஸ்மைடிரிப் நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காக உள்ளூர் விமானங்களில் ரூ.500 மற்றும் சர்வதேச விமானங்களில் ரூ.2,000 கட்டண சலுகையை வழங்குவதாக அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் ரோலி சின்ஹா தார் கூறினார்.


பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்

தூத்துக்குடி 97.64% 

தூத்துக்குடி, மே 8 -பிளஸ் 1 பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 97.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடம் பெற்றுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 54 அரசு பள்ளிகளில் 4442பேர் தேர்வு எழுதினர். இதில், 4193பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.18 சதவீதம். பிளஸ் 1 வகுப்பில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம். தொடர்ந்து படித்துக் கொண்டே தோல்வியடைந்த பாடங்களை எழுதி வெற்றி பெறவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல்லை

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் 97.59 சதவித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.