அறந்தாங்கி, ஜூலை 4- சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக்கிற்கு வீரவணக் கம் செலுத்தும் நிகழ்ச்சி புதனன்று அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கோபால் தலை மை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செய லாளர் தென்றல் கருப்பையா, விதொச மாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிர மணியன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கர்ணா, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மேகவர்ணம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெயந்தி, விதொச ஒன்றியச் செய லாளர் ராதா, வாலிபர் சங்க நிர்வாகி கள் தர்மராஜ், சசிகுமார், ஜெயராமன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.