tamilnadu

img

மீண்டும் வேலை வழங்குக! துப்புரவுத் தொழிலாளர் காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.11- திருச்சி மாநகராட்சி பொன் மலை கோட்ட நுண்உரம் கிடங்கில் வேலை செய்த சுயஉதவிக்குழு துப்புரவாளர்கள் 12 பேர் வேலை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் வேலை வழங்க வேண்டும். 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். வேலைக்கு தகுந்தாற் போல் தொழிலாளர்களின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி துப்புரவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் புத னன்று பொன்மலை கோட்ட அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி மாவட்டச் செயலா ளர் மாறன், மாவட்டப் பொருளாளர் விஜயேந்திரன், பொறுப்பாளர் ராஜ், மாவட்ட துணை நிர்வாகிகள் பாக்கியராஜ், ரவி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக் குழு செயலாளர் கார்த்திகேயன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, பொன்மலை பகுதிக்குழு செயலாளர் புவனேஸ்வரி ஆகி யோர் பேசினர். பின்னர் பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி தலை மையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களில் 2 பேருக்கு உடனடி யாக வேலை வழங்குவது, உரிய விசாரணை நடத்தி மீதமுள்ளவர் களுக்கு வேலை வழங்குவது என முடிவானது. இதையடுத்து போராட் டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில் துப்பு ரவு தொழிலாளர் சங்க நிர்வாகி கள், மாநகர காவல்துறை கண்டோன் மெண்ட் உதவி ஆணையர் மணி கண்டன், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.