tamilnadu

img

உணவுப் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

திருவாரூர், ஜூன் 7- திருவாரூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விளமல் பகுதி உணவகங்கள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உணவகங்களில் அயோடின் கலந்த உப்பினையே உணவுக்காக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டது.  நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், வட்டார சுகாதாரத் துறை மேற்பார்வையாளர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நாகப்பட்டினம்: இதே போல் நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் அரசுத்  தலைமை மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. உணவுக் கண்காட்சி, உறுதிமொழி ஏற்பு,  பொம்மலாட்டம், பட்டிமன்றம், கருத்தரங்கம் நடைபெற்றன. கண்காட்சியை, சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் தஆனந்த் திறந்து வைத்தார். உறுதி மொழி கையொப்பமிடும் நிகழ்ச்சியைத் கிராம செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் பா.ராணி முதல் கைபொப்பமிட்டுத் துவக்கி வைத்தார். பட்டிமன்ற நிகழ்ச்சியை மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் எஸ்.எம்.முருகப்பன் துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் கு.வரலட்சுமி தலைமை வகித்தார். வர்த்தகத் தொழிற்குழுமத் தலைவர் வி.ராமச்சந்திரன், அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளித் துணை முதல்வர் சாந்தி, புள்ளியியல் துறை அலுவலர் ப.அந்துவன்சேரல், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எம்.ஏ.காதர் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி நினைவுப் பரிசு வழங்கினார். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏடி.அன்பழகன் நன்றி கூறினார்.