tamilnadu

img

மோடியை எதிர்த்து வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டியிட முடிவு

இதுகுறித்து தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், ”விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பலமுறை டெல்லியில் போராட்டம் நடத்தி விட்டோம். அதற்கு, மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென்னிந்திய நதிகள் இணைப்பு, வங்கிக் கடன் தள்ளுபடி, விலை நிர்ணயக் கொள்கை ஆகிய பிரச்னைகள் குறித்த பல்வேறு போராட்டங்களுக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.


இனியும் தொடர்ந்து எங்கள் கோரிக்கைகளுக்காக, மோடியிடம் கையேந்தி நிற்க முடியாது. அவரை வீழ்த்த வேண்டும் என்றால் அவருக்கு எதிராகத் தேர்தலில் களமிறங்குவது தான் சரியானதாக இருக்கும். 


எனவே, நாங்கள் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளோம். இதற்காக வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறோம். வாரணாசியில் எங்களுக்கு விவசாயிகளின் செல்வாக்கு உள்ளதால் இந்தத் தேர்தல் போராட்டம் எங்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். எங்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டி மோடி அமைதியாக இருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் இதை செய்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.


;