தஞ்சாவூர், நவ.15- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சங்க பொன்விழா ஆண்டு துவக் கத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நகரியம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்ட மின்வா ரிய அலுவலக வாயிலிலும், தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயி லிலும் வட்ட செயலாளர் பி.காணிக்கைராஜ் தலைமையில் கொடியேற்றி அனைத்து மின் ஊழியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். வட்ட தலைவர் ஏ. அதிதூத மைக் கேல்ராஜ், வட்டப் பொருளாளர் ஆரோக்கிய சாமி மற்றும் நிர்வாகிகள் சங்கர், காமராஜ், அந்தோணிசாமி, ரமேஷ், ரவி ஆகியோருடன் அப்பகுதி தொழிலாளர்களும் பங்கேற்றனர்.