tamilnadu

img

கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை, மே 10-தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், நாணயவியல் கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தாய்த் தமிழ் பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். கல்வியாளர் பொன்.தனசேகரன் சிறப்புரையாற்றினார். நாணயவியல் சங்கத் தலைவர் பசீர் அலி, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க நிர்வாகி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தாய்த் தமிழ் பள்ளி தாளாளர் ராஜா வரவேற்றார். அறிவியல் இயக்க நிர்வாகி கருப்பையா நன்றி தெரிவித்தார்.