திருச்சிராப்பள்ளி, பிப்.13- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் 10 ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் கொடியேற்று விழா திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் ஒன்றியக் கிளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு ராஜ்குமார் தலைமை வகித்தார். விழாவில் சங்க கொடியை மாவட்ட செய லாளர் ரவி ஏற்றினார். பொருளாளர் சுப்ரமணி யன், சந்திரசேகரன், ஆனந்தன், சங்கிலி துரை, பாக்கியராஜ், தனபால், மருதை ராஜன் மற்றும் 26 பெண்கள் உட்பட 50 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.