திருச்சிராப்பள்ளி, பிப்.27- தில்லியில் சிஏஏவை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் மீது தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி 10 பேர் உயிரை பலி வாங்கிய வன்முறையாளர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதவெறி சக்திகள் நாடு முழுவதும் கல வரத்தை தூண்டுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று உறையூர் குறத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பிரிவு மாநில துணை பொ துச்செயலாளர் ராஜாமணி, காங்கிரஸ் கட்சி ஜவஹர், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் ஹபியூர்ரகுமான், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உபயதுல்லாரகுமான், தமுமுக மாவட்ட செயலாளர் ஜாபர், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். சிபிஎம் கட்சியினர், தோழமை சங்கத்தி னர் மற்றும் அனைத்து கட்சியினர் ஏராள மானோர் கலந்து கொண்டனர். சிபிஎம் உறையூர் பகுதி செயலாளர் சந்திர பிரகாஷ் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்
இதே போல் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு, எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முகமது இக்பால் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் ஆவூர் அன்சாரி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி, மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகுமார், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், நகரத் தலைவர் அப்துல் நசீர், சிபிஐ மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி யன், மாநகரச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மக்கள் அதிகாரம் காளியப்பன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செய லாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தஞ்சை இலக்கிய வட்ட ஒருங்கி ணைப்பாளர் எழுத்தாளர் சண்முக சுந்தரம், அமமுக வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி அ.நல்லதுரை, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா ளர் ஐ.எம்.பாதுஷா, இஸ்லாமிய கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது அப்பாஸ், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலா ளர் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.