திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட இடைக்குழு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் அர சியல் பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை துறை யூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாசிச அபாயம் என்ற தலைப்பில் மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர்உசேன், புதிய கல்வி கொள்கை என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ ராஜ், வெகுஜன அமைப்புகள் விரிவாக்கம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், இடைக்குழு செயல்பாடு கள் என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் பாக்கி யம், சமூக சீர்திருத்த வரலாறு என்ற தலைப்பில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர். முகாமில் 100 மார்க்சிஸ்ட் மாத இதழின் சந்தா தொகை மற்றும் 45 தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, திருச்சி தீக்கதிர் மேலா ளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினர். முகாமில் 156-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். முகாமை துறை யூர் இடைக்கமிட்டி சிறப்பான முறையில் செய்திருந்தது. முன்னதாக துறையூர் ஒன்றியக்குழு உறுப்பினர் காசி ராஜன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.