மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டக்குழுவின் சார்பில் திங்களன்று கோவில்பட்டியில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் அழகர்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் தியாகராஜன் கட்சி நிதி ரூ. 25 ஆயிரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சிதம்பரம் ஆகியோரிடம் வழங்கினார். வட்டக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, நாகராஜ், முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.