tamilnadu

img

பட்டமளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி, மே,5- திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருச்சி ஐஐடி இயக்குநர் பீமாராய் மேத்ரி சிறப்புரையாற்றி 236 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் நிர்மலா, கல்லூரி முதல்வர் பிரபாகர் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

;