tamilnadu

img

விருது பெற்ற மருத்துவருக்கு பாராட்டு

மன்னார்குடி செப்.15- மன்னார்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவ மனையில் கண் மருத்துவராக பணிபுரியும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு சிறந்த மக்கள் மருத்துவத்திற்கான சேவை விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கப்பட்டதற்கு மருத்துவர் கோவிந்தராஜுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழுவின் சார்பில் நேரில் சந்தித்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.  நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நகரக்குழு உறுப்பினர்கள் மூத்த கட்சித் தோழர் பி.சந்திரகாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கே.பிச்சைக்கண்ணு உள்ளிட்டோர் நேரில் சென்று மருத்துவர் பி.கோவிந்தராஜுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் விருதுபெற்ற மருத்துவருக்கு சால்வை அணிவித்து வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற பிடல் காஸ்ட்ரோவின் நூலை பரிசளித்தார்.