tamilnadu

img

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தருமபுரி, ஜன . 31- ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்தக்கோரி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, சேலம் மாவட் டத்தில் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதி யத்தை உயர்த்தி வழங்க வேண் டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி வங்கி ஊழியர்கள் கூட்ட மைப்பு சார்பில் வெள்ளியன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.  இதன்ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் வெள்ளியன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 122 வங்கிகளில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் முழுமையாக பங் கேற்றனர். இதனால் காசோலை மற்றும் ரொக்கம் என சுமார்  ரூ. 100 கோடிக்கான பரிவர்த்தனை முடங் கியது. மேலும், தருமபுரி ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க துணைப் பொதுச்செயலாளர் ஜே. முத்துக்குமார் தலைமை வகித் தார்.மண்டல செயலாளர் ஜி. வீரன் கோரிக்கைகளை விளக்கிப் உரையாற்றினார். இந்தியன் வங்கி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என். ராமமூர்த்தி தலைமை வகித் தார். வங்கி ஊழியர் சங்க மாவட் டப் பொதுச்செயலாளர் அ.கலி யுல்லா ,பொருளாளர் எஸ்.சி.பழ ணிவேலு, வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர்கள் தேவன், ரமேஷ், மூர்த்தி சுந்தர ராஜ் உள்ளிட்டோர் கோரிக் கையை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் 300க் கும் மேற்பட்ட வங்கிக் கிளைக ளில் பணியாற்றும் 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிப் பணிகள் முழு மையாகப் பாதிப்படைந்தது. மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழி யர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வங்கி ஊழியர் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு வங்கி ஊழியர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் தீனதயாளன், குணாலன், சம்பத், மணிகண்டன், உமாநாத் உள் ளிட்ட நூற்றுக்கணக்கான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
 

;