அரியலூர், பிப்.24- கேபிள் டிவி மாதாந்திர கட்டண உயர்வுக்கு வழி வகுக்கும் கேபிள் டிவி கட்டண சேனல்களில் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கேபிள் டிவி ஆப்ரேட் டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அரியலூரில் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். பொறு ப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்துச் சென்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்த்தன் தலை மை வகித்தார். 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசின் கீழ் செயல் படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக் கொள்ள சேனல் முதலாளி களுக்கு அனுமதி வழங்கி யுள்ளது. இதனால் கேபிள் கட்டணம் உயரவுள்ளது. எனவே, கண்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.