tamilnadu

img

தென்னிந்திய விளையாட்டுப் போட்டி ஏவிசி கல்லூரி மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை, ஜன.25- மயிலாடுதுறை அருகே உள்ள மன்னன் பந்தல் ஏவிசி கல்லூரி மாணவர்கள் தென் னிந்திய அளவிலான விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்று சாதனை படைத் துள்ளனர். தொட்டியத்தில் உள்ள தனியார் இன்ஜி னியரிங் கல்லூரியில் சமீபத்தில் நடை பெற்ற தென்னிந்திய அளவிலான விளை யாட்டு போட்டிகளில் கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண் டன. இதில் தமிழ்நாடு அணி சார்பாக ஏவிசி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஹேண்ட்பால் போட்டியில் மகளிர் அணி யில் கே. சாருமதி இரண்டாம் ஆண்டு பிகாம் முதல் இடத்தையும் மற்றும் ஆடவர் அணி யில் எஸ். டேவிட் லிவிங்ஸ்டன் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை எம். ஹரிபிரசாத் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மற்றும் எம். கரன் இரண்டாமாண்டு பிபிஏ மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும், தடகளப் பிரிவில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வி. குபேந்திர குணபாலன் மூன்றாம் ஆண்டு வேதியல் துறை மாண வர் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். தென்னிந்திய அளவில் பரிசுகள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவ- மாணவிகளை கல்லூரி யின் தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கி.கார்த்திகேயன், பொருளாளர் என்.ஞான சுந்தர், கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முதல்வர் இரா.நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஜெ.ராஜ்குமார், எம்.கீதா, பேராசிரியர்கள் பாராட்டினர்.

;