அரியலூர், ஜூன் 19- அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி உரிமையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் தாபழுரில் சங்க மாவட்ட செய லாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எ.தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜூலை 2ந் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி உரிமையாளர்கள் குடும்பத்துடன் மாட்டு வண்டி மணல் குவாரி வழங்கும் வரை உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.