tamilnadu

img

பாராட்டு விழா

தஞ்சாவூர் ஜூன்.28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேதுசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஏஷியன் ஹெச்.சம்சுதீன். ஏஷியன் ஹார்ட்வேர் மற்றும் லைட்டிங்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். லயன்ஸ் சங்க தலைவராகவும் உள்ளார். இஸ்லாமிய ஜமாஅத் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகளில் செயலாற்றி வருகிறார். பேச்சாளரான இவர் பல்வேறு பொதுச் சேவையில் ஈடுபட்டு பலரது பாராட்டை பெற்றவர்.  ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் ஏஷியன் ஹெச்.சம்சுதீன், கடந்த சில மாதங்களாக செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள கர்ப்பிணி பெண்கள், சத்தான உணவின்றி ரத்த சோகை ஏற்பட்டு பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் வேண்டுகோளின் பேரில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பசும்பால், முட்டை, பேரீச்சம் பழம் உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை வழங்கி வருகிறார். இவரது சேவையை பாராட்டி புதன்கிழமை நடைபெற்ற லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கே.பிரேம், எஸ்.முகமதுரபி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். ஏஷியன் ஹெச்.சம்சுதீன், கடந்த சில தினங்களாக இளைஞர்கள் ஒன்று கூடி தங்கள் சொந்த முயற்சியில் பேராவூரணி பெரியகுளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளதை வாழ்த்தி ரூ10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.