tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன் 5-  நாகப்பட்டினம், வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகை ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.  ஜீவாராமன் தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான நாகைமாலி, விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாள ரும் தலைஞாயிறு முன்னாள் ஊராட்சி ஒன்றி யப் பெருந்தலைவருமாகிய வி.அமிர்த லிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினர். சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், பி.கே.பகு, எம்.சுப்பிர மணியன், கே.செந்தில்குமார், நாகை நகரச் செயலாளர்(பொ) சு.மணி, வி.ச.-வி.தொ.ச. நிர்வாகிகள் .மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் என்,வடிவேல், ஏ.கே.குமார், வி.ராதா, கே.மாரிமுத்து, கே.காத்த முத்து, கே.ஜோதிபாசு, இ.ராமச்சந்திரன், ஆர்.ஜோதிபாசு, ஐ.முருகையன், என்.ரவி, ஏ.பி.அசோக், என்.சசிக்குமார், எம்.சேகர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் நாகைமாலி, வி.அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், நாகை வட்டாட்சியர் எஸ்.பிரான்சிஸ்சேவியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கீழையூர்

கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். சி.பி.எம். கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், வி.ச.- வி.தொ.ச.நிர்வாகிகள் ஏ.முரு கையன், எம்.அழகு, என்.நாகராஜன், ஆர். தெட்சிணாமூர்த்தி, எஸ்.வீராசாமி, ஆர்.எம். பழனிவேல், ஆர்.ராமமூர்த்தி, கே.செளந்த ரராஜன், எஸ்.டி.செல்வராஜ், ஏ.உமாநாத், எம்.வீரமணி, எம்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  வேதாரணியம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றியழகன் தலைமை யேற்றார். சி.பி.எம். வேதாரணியம் ஒன்றி யச் செயலாளர் வி.அம்பிகாபதி சிறப்புரை யாற்றினார். வி.ச.-வி.தொ.ச. நிர்வாகிகள் கோவை.சுப்பிரமணீயன், பி.எஸ்.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வி.தொ.ச. குத்தாலம் ஒன்றியத் தலை வர் கே.என், ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் மாநிலத் துணைத் தலைவருமான ஜி.ஸ்டாலின் சிறப்புரை யாற்றினார். சி.பி.எம். குத்தாலம் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறையில் விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.மணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவ லகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகம தலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் சிறப்புரை யாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் எம்.ஜியாவு தீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்பேற்றனர்.