tamilnadu

img

மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் ஆலங்காடு குப்பைக் கிடங்கு

மன்னார்குடி, ஜூன் 19- acமேலும் கொரோனா அச்சத்தின் பிடியில் மக்கள் வாழ்ந்து கொண்டி ருக்கும் தற்போதைய நிலையில் மிக மோசமாக சுகாதார கேட்டை இது உருவாக்கி உள்ளது. முத்துப் பேட்டை பேரூராட்சியின் இந்த அலட்சியத்தைக் கண்டித்தும் உடனே அந்த குப்பைக் கிடங்கை வேறொரு பகுதிக்கு மாற்றி டக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் முத்துப் பேட்டை ஒன்றியக்குழு சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சி.செல்லதுரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணி யன் முன்னிலை வகித்தார். ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் எம்.வி.கனகசுந்தரம், ஆர்.வீரமணி, என். ராஜேந்திரன், எல்.டி.வீரசேகரன் பேசினர்.  நிறைவாக மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, மக்கள் நெருக்கமாக அதிகம் வசிக்கக் கூடிய இந்த பகுதியில் குப்பைக் கிடங்கு இருப்பது சுகாதார அறிவியலுக்கு புறம்பா னது. மாற்று இடம் கண்டுபிடித்து இக்குப்பைக் கிடங்கை அப்புறப் படுத்திட முத்துப்பேட்டை பேரூரா ட்சி தாமதமின்றி உடனே நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.