tamilnadu

img

கொத்தடிமையாக இருந்த 50 பேர் மீட்பு

தஞ்சாவூர், மே.17-தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் உள்ள தேவன்குடியில் சேகர் என்பவரின் செங்கல்சூளையில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 24 பேரும், ராஜூ என்பவரின் செங்கல் சூளையில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 18 பேரும், மணி என்பவரின் செங்கல் சூளையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 50 பேர் கொத்தடிமைகளாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் தகவலறிந்து வியாழக்கிழமை தேவன்குடிக்கு சென்ற கோட்டாட்சியர் வீராசாமி, பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் 50 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சேகர், ராஜூ, மணி ஆகியோர் மூவரையும் தேடி வருகிறார்கள்.