அகர்தலா, ஜுன் 12- திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான டெய்லி தேசர்கதாவின் ஆசிரியர் மிலான் டி.சர்க்கார் (68) புதனன்று காலமானார். உடல்நலக் குறைவால் அகர்தலா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய் கடுமையானதைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. சிகிச்சை பயனளிக்காத நிலையில் புதனன்று மிலான் டி.சர்க்கார் உயிரிழந்தார்.