tamilnadu

கூட்டுறவுச் சங்கம் மூலமாக மலபார் இன்ஸ்டண்ட் காபி

பிரம்மகிரி கூட்டுறவு காபி சொசைட்டியின் சார்பாக மலபார் இன்ஸ்டண்ட் காபி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இது வயநாட்டில் உள்ள காபி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காபி உற்பத்தியாளர்களுக்கும், ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காபி உற்பத்தியாளர்களுக்கும் பயனளிக்கக்கூடிய தாக இந்த சொசைட்டி உள்ளது. எனவே கூட்டுறவு சாகுபடி மூலமாக கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கான தேவை இருக்கிறது. அப்படி உருவாக்குவோமேயானால் இன்றைக்கு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை உள்ள காபிக்கொட்டையின் விலை ரூ.240 முதல்  ரூ.280 வரை  இரட்டிப்பாகும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.