திண்டுக்கல், ஜுலை 10 - திண்டுக்கல்லில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த இளம் போராளி சரண்குமார் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி ரூ.2.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவராகவும், திண்டுக்கல் ஒன்றியச் செய லாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் களப் பணியாற்றியவர் தோழர் சரண்குமார். மிக இளம் வயதிலேயே உடல்நலமின்றி அனை வரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்த தோழர் சரண்குமாரின் குடும் பத்திற்கு கட்சி மூலம் பாது காப்பு நிதியை மாவட்டம் முழுவதும் இடைக் கமிட்டி கள் திரட்டி வழங்கின. அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று அவ ரது சொந்த ஊரான சங்க னம்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்கள் கண் ணீர் மல்க அவரது நினைவு களை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தனர். இதனையடுத்து ரூ.2.50 லட்சம் நிதியை அவரது தாய் விஜயராணியிடம் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் கே. பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், ஒன்றி யச் செயலாளர் தா.அஜாய் கோஷ், நகரச் செயலாளர் பி.ஆசாத், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர். பாலாஜி, மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்த்தன் ஆகியோர் கலந்து கொண்ட னர். ஒன்றியச் செயலாளர் நிருபன்பாசு நன்றி கூறி னார். நிகழ்ச்சியில் கட்சி யின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள், சங்கனம்பட்டி பொது மக்கள், வாலிபர்சங்க நிர்வாகிள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)