tamilnadu

img

மோடிக்கு துணைபோகும் எடப்பாடி பழனிசாமி அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதா?

திண்டுக்கல்/இராமநாதபுரம், மே 28- இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற் சிக்கும் தமிழக அரசைக் கண்டித்து திண்டுக்கல், பழனி, இராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயி கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக 28 மையங்களில் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.   திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பவுல், ஆவுளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்கவுன்சில் செல்வநாயகம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செய லாளர் பழனிச்சாமி, பொருளாளர் ராஜாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ் உள்ளிட்ட 30 பேர் பங்கேற்றனர். இதில் 14 பேர் கைதானர்கள். தேனி மாவட்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வெண்மணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 சாணார்பட்டி ஒன்றியத்தில் மூன்று மையங் களில் ஆர்ப்பா எட்டங்கள் நடைபெற்றன. மாவட்டச் செயலாளர் என்.பெருமாள் தலை மையில் வி.எஸ். கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரன், சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். ஒன்றியத் தலைவர் மூக்கராஜ் தலைமையில் ஆவிளிபட்டியிலும், சின்ராஜ் தலைமையில் எமக்கலாபுரத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெள் ளைக்கண்ணன், ஆவிளி பட்டி ஊராட்சித்தலை வர் பெரியசாமி, எம்.கே.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். குஜிலியம்பாறையில் மாவட்டப் பொருளாளர் தங்கவேல் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஜெயபால், தம்பிமுத்து பழனிச்சாமி ஆகி யோர் பங்கேற்றனர்.  வேடசந்தூர் ஒன்றியம் புதுரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலா ளர் சி.எஸ்.முத்துச்சாமி சவடமுத்து, கனிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் முனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.  ரெட்டியார்சத்திரத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் பி.ஏ.கருப்பணன், ஒன்றியச் செயலாளர் தயா ளன், மணிமாறன் ஆகியோர் பங்கேற்றனர். பண் ணைப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் துணைத்தலைவர் ராஜு, சர்க்கரை, பாலச்சந்தர் ஆகியோர் பங்கேற்றனர். 

ஆத்தூர் ஒன்றியம்: சிங்காரக்கோட்டையில் மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன். அய்யம் பாளையத்தில் ஒன்றியச் செயலாளர் பிச்சை மணி, சித்தரேவில் சீராளன், சித்தையன்கோட்டை யில் பசீர்கான், மல்லையாபுரத்தில் சுரேஷ், சின்னாளபட்டியில் கோபால், ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  பழனி ஒன்றியம் பாம்பம்பட்டியில் மாவட் டத்தலைவர் செல்வராஜ், கிருஷ்ணன், பழ னிச்சாமி, குழந்தைவேலு, ஆயக்குடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் களஞ்சியம், சின்னச்சாமி, கோபாலகிருஷ் ணன், கருப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர். தொப்பம்பட்டி ஒன்றியம் தும்மலப்பட்டியில் கனகு, பாறைப்பட்டியில் மணி, கோரிக்கடவில் வேலுச்சாமி, வாகரையில் பழனிச்சாமி, போடு வார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மானூரில் இரண்டு இடங்க ளில் சின்னத்துரை, அய்யாச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டை ஒன்றியம் நிலக்கோட்டை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுப்பையா தலைமை வகித்தார். ஒன்றியத் துணைச் செய லாளர் காசிமாயன், பால்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மலைச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.சௌந்திரராஜன், கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.  வத்தலகுண்டு ஒன்றிம் விருவீட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பி னர் சடைமாயன் தலைமை வகித்தார். கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  வடமதுரை ஒன்றியம் அய்யலூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத்தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் குணசேகரன், கண்ணன், சம்சுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.  நத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். தலைவர் பொன்னுச்சாமி, ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சின்னக்கருப்பன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இராமநாதபுரம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கடலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் வி. மயில்வாகனன் ,கருணாநிதி, விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தாலூகா செயலாளர் தங்கச் சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  சிக்கலில் விவசாயிகள் சங்கத் தலைவர் எம். சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பச்சமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;