கோவை, பிப். 11 – சாலைகளை சீரமைக்க பல முறை மனு அளித் தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து செவ்வாயன்று திமுக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் மேம்பா லத்தின் அணுகு சாலையை சீரமைக்க பல முறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதுகுறித்து திமுக எம்எல்ஏ நா.கார்திக் கூறுகையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 61வது வார்டு ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக மோசமாக குண்டும், குழியு மாக உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டும், சாலை கழிவுகள் தேங்கி யும் கிடக்கின்றது. இதுதொடர்பாக பல முறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், கோட்ட கணக்காளர் பீரான் ஆகியோர் நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.