tamilnadu

உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம்

தருமபுரி, ஏப்.25-பாலக்கோடு ஒன்றியம்,பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலகமலேரியா தினத்தையொட்டி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம்,பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் மருத்துவர்.ச.நவீன் தலைமையில் “உலக மலேரியாதினம்”விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சுகாதார மேற்பார்வையாளர் ஏ.சேகர், மலேரியா நோயைப் பற்றிவிளக்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தேங்கி நிற்கும் நீரில் ஆற்றுப் பகுதிகளில் உற்பத்தியாகும் “அனாபிளஸ்” கொசுக்களின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களை இந்த கொசு கடிப்பதன் மூலம் ரத்தத்தின் வழியாக பரவும் விதம் மற்றும் அதன் வகைகள் குறித்தும் விளக்கினார். மேலும், மிக அதிக காய்ச்சல்,குளிர், தலைவலி, வியர்த்து கொட்டுதல், வாந்தி, சோர்வடைதல், திடீரென காய்ச்சல் குறைதல் போன்றவை மலேரியா நோய் குறித்தான அறிகுறிகள் ஆகும். இதனை எளிய ரத்த பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த பாதிப்படைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்து வழங்கப்படும். சுத்தமான நீர் மழை நீர் உள்ளிட்ட தேங்கி நிற்கும் நீரை அகற்றி கொசுப் புழுக்களை அழித்து கொசுக்களை ஒழித்து மலேரியா நோயை கட்டுப்படுத்தமுடியும். நோயின் தாக்கத்தை குறைத்து உயிரிழப்பு இல்லாமல் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில், கிராம சுகாதார செவிலியர் எம்.சாந்தா நன்றி கூறினார்.

;