tamilnadu

img

இலவச மனைபட்டா வழங்கிய இடத்தை அபகரிக்க முயற்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தருமபுரி, பிப். 17- தரமபுரியில் ஆதிதிராவிடர் மக் களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைபட்டாவுக்கான இடத்தை காலிசெய்யும் முயற்சியை கண் டித்து அதிகாரிகளை முற்றுகை யிட்டு பயனாளிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினர். தருமபுரி நகராட்சிக்குட்பட்ட கோல்டன் தெருவில் ஆதிதிராவி டர் மக்கள் வசித்து வருகின்றனர். 1995ஆம் ஆண்டு இங்கு தகுதி யுள்ள மக்கள் 181 பேருக்கு ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் இலவச மனைபட்டா வழங்கப்பட் டது. ஆனால், இதுநாள் வரை பட் டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்கவில்லை. பட்டாவுக் கான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பய னாளிகள் 2015-ம் ஆண்டு மனு அளித்தனர். ஆனால், எத்தகைய  நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் பிப்.7ஆம் தேதியன்று மாவட்ட ஆதிதிராவி டர் நலத்துறை அலுவலரால் 181 பயனாளிகளின் பட்டாவுக்கான இடத்தை ரத்து செய்வதாக கிராம நிர்வாக அலுவலகத்தில் நோட் டீஸ் ஒட்டப்பட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த உத்தரவை ரத்துசெய்து 181 பயனாளிகளுக்கும் வழங்கப் பட்ட மனைபட்டாவுக்கான இடத்தை அளந்து வழங்க வேண் டும் என ஆட்சியரிடம் முறையிட்ட னர். இதனிடையே சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இலவச மனைபட்டா வழங்கிய இடத்தில் சில பயனாளிகள் வீடுகட்டி வரு கின்றனர். இந்நிலையில் வட்டாட் சியர் சுகுமார் பிப்.17ஆம் தேதி யன்று அரசு நிலத்தை ஆக்கிர மிப்பு செய்ததாக, தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இல வச மனைபட்டா வழங்கிய இடத் துக்கு வந்த காவல் துறையினர், இடத்தைவிட்டு வெளியேறுமாறு பயனாளிகளை மிரட்டினர். இத னையடுத்து பயனாளிகள் எங்க ளுக்கு  உண்டான இடத்தில் வீடு கட்டி வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத் துக்கு மாவட்ட வருவாய் அலுவ லர் ரகமத்துல்லாகான், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், கோட்டாட்சியர் பொறுப்பு தேன்மொழி ஆகியோர் வந்தனர். இவர்களை முற்றுகை யிட்ட மக்கள் எங்களுக்குண்டான இடத்தை பறிக்கக்கூடாது என வாதித்திட்டனர். இந்த இடத்தை அரசுக்கு கொடுத்துவிடுங்கள். இங்கேயே அடுக்குமாடி குடியி ருப்பு கட்டிதருவதாக அதிகாரிகள் கூறினர். மேலும், அம்மக்கள் எங்கள் உயிரே போனாலும் எங்க ளுக்கு உண்டான இடத்தை கொடுக்கமாட்டோம் என முற்று கையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரி டம் கலந்து ஆலோசித்து நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

;