tamilnadu

img

அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு மீட்டுத்தரக்கோரி குடியேறும் போராட்டம்

தருமபுரி, செப்.10- அருந்ததியர் மக்களுக்காக ஒதுக்கப் பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்டு தரக்கோரி தருமபுரி அருகே பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டுக்காரம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனை வரும் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இம்மக் களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஏக்கர் நிலம் அரசு வழங்கியது. இந் நிலையில், இந்த இடத்தை தனிநபர் பல ஆண்டு காலமாக  ஆக்கிரமிப்பு செய் துள்ளதால் இம்மக்களில் பலர் வீடு இல்லா மல் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இது தொடர்பாக  சம்மந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு அப்பகுதியினர் பலமுறை மனு அளித்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இல்லை.  இந்நிலையில், அரசால் ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ள இடத்தை  மீட்டுத்தரக் கோரியும், அவ்விடத்தில் வீடு இல்லாதவர்களுக்கு மனை பட்டா வழங்கக்கோரியும் ஆட்டுக்காரம்பட்டி அருந்ததியர் மக்கள் குடியேறும் போராட் டத்தில்  ஈடுபட்டனர். இதையடுத்து தரும புரி சார் ஆட்சியர் சிவன் அருள் அம்மக்க ளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரண்டு மாதத்திற்குள் அந்த இடத்தை மீட்டு வீடு இல்லாதவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தார். இத னையடுத்து பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;