tamilnadu

img

வேளாண் விளைபொருட்களை சந்தைபடுத்த நடவடிக்கை எடுத்திடுக தருமபுரி விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, பிப். 1- வேளான் விளைபொருட்களை சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட விவசா யிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயி கள் வலியுறுத்தினர்.  தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இதில், விவ சாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசா யிகள் பேசியதாவது, தருமபுரி மாவட்டத் தில் வறட்சியின்போது காய்ந்த தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்கள் குறித்து கணக் கெடுப்பு நடைபெற்றது. ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே, காய்ந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நெற்பயிரில் நோய் பாதிப்பு தற்போது அதிக ளவில் காணப்படுகிறது. இதனைத் தடுக்க நோய் பாதிப்பில்லா விதைகளை முன்கூட் டியே பரிந்துரைக்க வேண்டும். போதிய அள விலான விதை, உரங்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.  சொட்டு நீா்ப்பாசன முறையில் விவசா யிகளுக்கு என்னென்ன பொருட்கள் வழங் கப்பட வேண்டும் என்ற பட்டியலை அளிக்க வேண்டும். இதில், அனைத்துப் பொருட் களும் விவசாயிகளுக்கு வழங்கிய பின்னரே  அந்த நிறுவனங்களுக்கு தொகை விடுவிக்க  வேண்டும். வங்கிகளில் விவசாயிகளுக் கான கடன் வழங்கும் முறையை எளிமை யாக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடா்பாக வங்கி அலுவலா்க ளுக்கு போதிய பயிற்சியளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ரசாயன உரங்களுக்கு பதி லாக இயற்கை உரத்தை பயன்படுத்த விவ சாயிகளை ஊக்கப்படுத்திடவும், மரபு விதை களை வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திப் பேசினர். இதனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

;