tamilnadu

பொய் புகாரில் காவல்துறை அராஜகம் ஆட்சியரிடம் பெண் புகார் மனு

தருமபுரி, செப். 21- விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணை சித்தர வதை செய்ய மாரண்டஅள்ளி காவல் துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரும புரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின், தெய்வாணை தம்பதி யினர். இ்த்தம்பதியினரை கடந்த மார்ச் 18 ஆம் தேதியன்று விசாரணை என்ற பெயரில் மாரண்டஅள்ளி காவல்துறை யினர் அழைத்து சென்றனர். அப்போது, ஸ்டாலின், தெய் வாணை தம்பதியினரை நகை திருடியதாக குற்றம் சுமத்திய காவல் துறையினர், அவர்களை நாள் முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் சங்க தலைவர்கள் தலையிட்டு காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனை யடுத்து அத்தம்பதியினரை காவல்துறையினர் விடுவித்த னர்.

இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம், தருமபுரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்கண்காணிப் பாளர் ஆகியோருக்கு தெய்வாணை புகார் மனு அனுப்பி யிருந்தார்.  இந்நிலையில் செப்.15 ஆம் தேதியன்று சிரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கற்களை எரிந்து தெய் வாணையை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தெய்வாணை பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்து 5 நாட் களாகியும் மாரண்டஅள்ளி காவல்துறையினர் எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருகின்றனர்.

எனவே, பொய்புகாரின் பேரில் செய்யாத குற்றத்திற்காக ஒருநாள் முழுவதும் சித்த ரவை செய்த மாரண்டஅள்ளி காவல் துணை ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் கற்கலால் தாக்கிய ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தெய் வாணை தனது குடும்பத்தினருடன், தருமபுரி மாவட்ட ஆட்சி யர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தார்.

;