tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம்

தருமபுரி, நவ.17- காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஏரிகளி லும்  நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் இரண்டாவது நாளாக  மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பென்னாகரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் நகர செயலா ளர் எஸ்.வெள்ளியங்கிரி தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாதன், விஸ்வநாதன், மாவட்டகுழு உறுப்பினர் பி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கதில் பாப் பாரப்பட்டி பகுதி குழு செயலாளர் பார்  சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சோலை அர்ஜு னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.