tamilnadu

உள்ளாட்சி தேர்தல் - 2019 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியீடு

தருமபுரி, ஏப்.25- தருமபுரியில் உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடிகளின் விவரப்பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டர். தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், வட்டார ஊராட்சி உறுப்பினர்கள், சிற்றுராட்சி உறுப்பினர்கள் மற்றும் சிற்றுராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதே போன்று நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றம் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவி இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகம் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராமஊராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தருமபுரி நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளின் வரைவு பட்டியல்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்களோ தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகளோ இது தொடர்பாக தங்களதுகருத்துகளை அல்லது மறுப்புகளை தெரிவிக்க விரும்பினால் அதனை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ 2.5.2019 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.

;