tamilnadu

புதிய கல்விக் கொள்கை வரைவு: தமிழக அரசுக்கு வேண்டுகோள்

சென்னை, ஜூன் 5-மத்திய அரசு வெளியிட்ட 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழில் மொழிபெயர்த்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுப் பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுகோள் விடுத் துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்  கூறியது:இந்தி பேசாத மாநிலங் களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியைப் படிக்க வேண்டும் என்று அதில் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியாகும். இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் எதிர்காலத் தில் இந்தியா சந்திக்கும் நவீன சவால்களை எதிர் கொள்ளும் வகையில் ஏற்புடையதாக புதிய கல்விக் கொள்கை அமைய வேண்டும்.தேசிய தேர்வு முகமை (என்டிஏ) என்ற மத்திய அரசின் அமைப்பு, மேல்நிலைக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப் படையில் நேரடியாக கல் லூரிகள், பல் கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என புதியக் கல்விக் கொள்கை வரைவில் கூறப் பட்டுள்ளது. இது மாநில அரசின் உரி மையைப் பறிக்கும் செயலா கும். இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் அதில் உள்ளன.எனவே மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த வரை வைப் படித்து தேவையான கருத்துகளைத் தெரிவிக்க ஒரு மாதம் போதுமானதாக இருக்காது. குறைந்தபட்சம் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும். அதேவேளையில், இந்த வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பான ஒரு விரி வான கலந்துரையாடல் நடத்தி அதில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் சங்கத்தினரை பங் கேற்கச் செய்து கருத்துகளைப் பெற வேண் டும். அவ்வாறு பெறப்படும் கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜெயபிரகாஷ் காந்தி
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “இந்தியா போன்ற பல் வேறு கலாச்சாரம், பண்பாடுகளை பின்பற்றும் மக்கள் நிறைந்த நாட்டில் ஒரே கல்விக் கொள்கை ஏற்புடையதல்ல. இது நாட்டின் பன் முகத் தன்மையை சீர்குலைத்துவிடும். குறிப்பாக மும் மொழிக் கல்வி கொள்கையை மத்திய அரசு திணிக்க முயல் வது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படக் கூடும். சிறந்த கல்வி என்பது அந்தந்த மக்களின் நிலம் சார்ந்த கலாச்சாரங்களை எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். இதற்கு கல் வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே சிறந்த தீர்வாகும்” என்றார்.