tamilnadu

img

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை

தருமபுரி, பிப்.16- மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்  6 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள் ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடை பெற்றது. வாலிபால் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் அரசு கல்லூரி வாலிபால் ஆடவர் அணி கால்  இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது.  ஜூடோ போட்டியில்  எம்.நவீன் குமார்  (கணினி அறிவியல் துறை) என்ற இரண் டாம் ஆண்டு மாணவன் 90 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் மாநில அளவி லான  போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதே போல் வி.சக்திவேல் (கணினி அறிவியல் துறை)  என்ற இரண்டாம் ஆண்டு மாணவன்   66 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள் ளார். மெய்யழகன் (இரண்டாம் ஆண்டு  காட்சித் தொடர்பியல் துறை) என்ற மாணவன் 80 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். எம்.ராகுல் (முதலாமாண்டு மின்னணுவியல் துறை) என்ற மாணவன் 100 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.  குத்துச்சண்டைபோட்டி போட்டியில் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவன் எம்.ஜெயகுமார் 69 கிலோ  எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம்  வென்றுள்ளார். இரண்டாம் ஆண்டு கணினி  அறிவியல் துறை மாணவன் கே.வெற்றி வேல் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவன் வெற்றிவேல் 52 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென் றுள்ளார். இதையடுத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பரிசுத் தொகைக்கான காசோலை, சான்றிதழ் கள் வழங்கி கவுரவித்தார்.  முன்னதாக, போட்டிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி துவக்கி வைத்து  மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித் தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பால முரளி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

;