சீர்காழி, மே 31- நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச் சல் போட்டி நடைபெற்றது. பயறு சாகு படி செய்யப்பட்ட ஒரு வயலில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மதி யரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தவமணி, வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், வேளாண் அலு வலர் விவேக், உதவி விதை அலுவலர் கள் தனசேகர், வேல்முருகன் உள்ளிட் டோர் பயறு செடிகளை எடை போட்டு ஆய்வு செய்தனர். அதிக மகசூல் ஈட்டும் விவசாயிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ 10 ஆயிரம் மற்றும் இரண்டாம் பரிசாக ரூ 5 ஆயிரமும் வழங்கப்படுவதாக மாவட்ட வேளாண் துணை இயக்குநர் மதியரசன் தெரிவித்தார். நெல், உளுந்து, பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் செய்த விவசாயிகளுக்கு அந்தந்த பயிரின் தரம் ஆய்வு செய்யப்பட்டு முதல் மற்றும் இரண்டாவது பரிசுகள் வழங்கப் படுகிறது என்றார்.