tamilnadu

img

தருமபுரி: திறந்திருக்கும் சாக்கடை கால்வாயால் நோய் பரவும் அபாயம்

தருமபுரி, டிச. 2- தருமபுரி 10ஆவது வார்டில் முறை யான சாக்கடைக் கால்வாய் அமைக் கப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்ப டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியி ருப்புவாசிகள் குற்றம்சாட்டி உள்ள னர்.   தருமபுரி நகராட்சி 10ஆவது வார் டிற்குட்பட்டது அன்னை சத்யா நகர். இங்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால் மழைநீர் வெளி யேறாமல் சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவானது. இதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும்  பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். அப்பகுதியில் உள்ள  பெட்ரோல் நிலையமும் மழை நீரால்  சூழப்பட்டது. மழை நீர் வடியாமல் பத்து நாட்களுக்கு மேல் பெட்ரோல் நிலையம் மூடப்பட்டது. இந்த பகுதி யில் முறையான வடிகால் வசதியும்,  கழிவு நீர்கால்வாய் வசதியும் சரியாக இல்லாததால் இந்த நிலை ஏற்பட் டது. இந்நிலையில் மாவட்ட நிர்வா கத்தினர் மழை நீரை வெளியேற்ற அப்பகுதி முக்கிய சாலையோரம் கால்வாய் போன்று பள்ளம் தோண்டி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் மழைநீர் முழுமையாக வெளியேறாமல் தேங் கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், பள்ளி மாண வர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் காய்ச்சல் உள் ளிட்ட தொற்று நோய்களால் பாதிப்ப டைந்துள்ளனர்.  மேலும் குறுகலான சாலையில் குழித் தோண்டப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வாகனங்களில் செல் வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி  வருகின்றனர். ஏராளமான மாணவர் கள் அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு சைக்கிள் மற்றும் நடந்தும் செல்கின்றனர். சாலை யோரத்தில்  வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் தவறி விழும் நிலை ஏற் பட்டுள்ளது. மேலும் சிறிய அளவு மழை பெய்தாலும் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.  இத னால் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் தெரு விளக்கு சரியாக எரிவதில்லை. இத னால் இரவு நேரங்களில் செல்வோர் பாதிப்படைந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி  நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவ டிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை.   எனவே இப்பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என இப்பகுதிமக்கள் வலியுறுத்து கின்றனர்.