tamilnadu

தருமபுரி, திருப்பூர் முக்கிய செய்திகள்

ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
தருமபுரி, அக். 28- தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையிலிருந்து பாசனத்திற்காக திங்களன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி அணையிலிருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பாசனத் திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறி யதாவது, ஈச்சம்பாடி அணைக்கட்டின் இடது மற்றும்  வலது புறகால்வாய்களின் மூலம் 6250 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. இன்று முதல் 120 நாட்களுக்கு  அல்லது ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும் வரை தண்ணீர் திறந்து விடப்படும். அணைக்கட்டில் தற்போது உள்ள நீர் அளவைக் கொண்டும், தண்ணீரை சிக்கனமாக பயன்ப டுத்தி பாசனம்பெறும் வகையில் திறந்து விடப்படுகிறது எனக்குறிப்பிட்டார்.  இதன் மூலம் ஈச்சம்பாடி, அக்ரஹாரம், கெட்டுப்பட்டி, எலவடை, பாளையம், சாமாண்டஅள்ளி, பள்ளிப்பட்டி உள் ளிட்ட 32 கிராமங்கள் பயன்பெறும். மேலும், நெல், கரும்பு,  ராகி, சோளம், நிலக்கடலை, தென்னை ஆகிய வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெறலாம். எனவே விவசாய பொதுமக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக விளைச்சல் பெறுமாறு விவசாய பெருமக்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார் இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பி னர் வே.சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹ மத்துல்லாகான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலை வர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழ கன், பொதுப்பணித்துறை நீர்வளஆதார அமைப்பு செயற் பொறியாளர் மெய்யழகன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) தேன்மொழி, மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அவிநாசி அருகே தனியார் ஆம்புலன்ஸ் மீது சரக்கு ஆட்டோ மோதல் இருவர் பலி
அவிநாசி, அக். 28-சேலத்தில் இருந்து கோவை நோக்கி தனியார் ஆம்பு லன்ஸ் சனியன்று சென்று கொண்டிருந்தது. அவிநாசி 6 வழிச்சாலை புதுப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற மரச்சா மான்கள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ, நிலை தடுமாறி  சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் திருப்பூரில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனமும் ஆம்புலன்சின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் ஆட்டோ ஓட்டுநர் கோவை வெள்ளாலம்பட் டியைச் சேர்ந்த பழனிசாமி மகன் அஜய்குமார்(20), கோவை  இடையர்பாளையம் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் கார்த்திகேயன்(20) ஆகியோர் சம்பவயி டத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ்குமார்(39), உதவியாளர்  முரளி, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேந்திரன்(19), மாதன்(30), கார்த்தி(28) ஆகியோர் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.