tamilnadu

img

மின்வாரிய தலைவரை கண்டித்து மின்வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 16- தொழிற்சங்க தலைவர்களை சந்திக்க மறுக்கும் மின்வாரிய தலைவரின் தொழி லாளர் விரோத, தொழிற்சங்க விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழு வினர் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள் கொரோனா நோய்த் தொற்றால் இறக்க நேர்ந்தால் பிரதமர் காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஊழியர்களின் பணபயன்கள் மீது தாக்குதல் தொடுப்பதை நிறுத்த வேண்டும். முடக்கப்பட்ட இஎல், சரண்டர், அகவிலைப் படியை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித் தார்.

இதில், மாவட்டத் தலைவர் லெனின் மகேந்திரன், பொருளாளர் ஜெயபிகுமார், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நாக ராஜ், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் முரு கன், எல்பிஎப் திட்டச் செயலாளர் சக்தி வேல், என்எல்ஒ மாவட்டத் தலைவர் தர்ம லிங்கம், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் நந்த குமார், ஐக்கிய பொறியாளர் சங்க மாவட் டத் தலைவர் ஆறுமுகம், ஏஇஎஸ்யூ மாவட் டத் தலைவர் திருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;