tamilnadu

img

சின்னாற்றில் வீணாகும் மழைநீரை சேமிக்க தடுப்பணை கட்டிடுக - விவசாயிகள் வலியுறுத்தல்

 தருமபுரி, ஜூலை 1- பாலக்கோடு சின்ன ஆற்றில் வீணா கும் மழைநீரை சேமிக்க தடுப்பணை கட்ட அப்பகுதி விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, கேசர்குலி அணை, தும்பல ஹள்ளி அணை என மூன்று அணை கள் மூலம் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நேர்முக மாக பயனடைந்து வருகின்றனர்.  கடந்த 15 வருடங்களாக போதிய மழை யின்மை, பருவமழை குறைவால் ஏரி கள், அணைகள் அனைத்தும் வறண்டு சூழ்நிலை காணப்படுகிறது. இப்பகுதி களில் விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, பாக்கு, மா மற்றும் பூக்கள், காய்கறிகள் என அதிக அளவில் விவ சாயம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், போதிய நீர் கிடைக் காததால் பாதி விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு போதிய வருவாய் இல்லாமல் போக, வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு தினக்கூ லிக்கு செல்லும் அவல நிலையில் உள் ளனர். சில சமயங்களில் பெய்யும் மழையால்  அணைகள் நிரம்பி  உபரி நீரை திறந்து விட்டாலும், தடுப்பணை கள் எதுவும் இல்லாதால் விவசாயிகளுக்கு பயனற்று போன நிலையில் 50கி.மீ தூரம் கடந்து சென்று காவேரி ஆற்றில் கலக்கிறது.  இதுகுறித்து அதிகாரிக ளிடமும், ஆட்சியாளர்க ளிடமும் இப்பகுதி விவசா யிகள் பலமுறை மனுகொடுத் தும் இதுவரை எந்த ஒரு நட வடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள் ளனர். எனவே, தற்போது பருவமழை தொடங்கவுள்ளதால் வரும் மழை நீரை சேமிக்க சின்ன ஆற்றுப்படுகை களில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க வேண்டுமென வும் இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

;