tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பேரணி

தருமபுரி, பிப்.6- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனா ளிகள் பாதுகாப்பு நல சங்கத்தின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பேரணி நடைபெற்றது.  தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு அனைத்து  வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு நல  சங்கத்தின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை  முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின்  பேரணி நடைபெற்றது. பென்னாகரம்  பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக வந்த பேரணி முக்கிய வீதிகளில் சென்று டெம்போ ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது.  இப்பேரணிக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஜி.கருவூரான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், சின்னம்பள்ளி பகுதி  குழு செயலாளர் முனியம்மாள், செயலாளர் சின்னம்மா, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ரஜினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.