tamilnadu

img

பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிடுக சிவாடி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

தருமபுரி, ஜன. 26- இந்துஸ்தான் பெட்ரோல் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என சிவாடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. குடியரசு தினவிழாவையெட்டி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சிவாடி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஆறுமுகம் ஊராட்சிசெயலாளர் சித்ரா உள் ளிட்ட ஊராட்சி உட்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். சிவாடி கிராமத்தில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பங்கள் உள் ளன. இங்கு பெரும்பாலும் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுகுறு விவசாயி கள். அரை ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். இவர் கள் இந்நிலத்தையே வாழ்வாதார மாக கொண்டுள்ளனர். இந்நிலையில் (எச்.சி.எல்) இந் துஸ்தான் பெட்ரோலியம் காரப் பரேசன் லிமிடெட் ,சிவாடி கிராம நிலத்தில் பெட்ரோலியம் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க முடிவெ டுத்துள்ளது.இவை அமைக்கப்பட் டால் சொந்த ஊரிலேயே இம்மக் கள் அகதிகளாக மாற்றப்படுவார் கள். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இந்த மக்களை சொந்த நிலத்தில் இருந்து வெளி யேற்றும் முயற்சியை அரசு கைவிடவேண்டும் சிவாடி மக்க ளின் வாழ்வாதாரத்தை பறிக்கும்  (எச்.சி.எல்) இந்துஸ்தான் பெட் ரோலியம் காரப்பரேசன் லிமி டெட் ,சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் இத்திட்டத்தை அமைக்க கூடாது என கிராமமக்கள் ஒருமனதாக கிராமசபைக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைசெயலா ளர் ரமேஷ்,மற்றும்லஷ்னண்,சிவகுரு,வாசு,முத்து உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும், குடிநீர், தெருவிளக்கு, அரசு தொகுப்புவீடு, சாலைவசதி, ஒகேனக்கல் குடிநீர் போன்ற அடிப் படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டது.

;