tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

பென்னாகரம், ஜூன் 16- 100 நாள் வேலைத் திட்டத்தில் முழு மையாக வேலை அளிக்கக்கோரி பென் னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், மஞ்சனாகல்லி ஊராட்சிக்குட்பட்ட மஞ்சனாகல்லி, பெரிய காரமடை, சின்ன காரமடை  உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் முழுமையாக வேலை அளிப்பதில்லை என தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும் என வலியு றுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், மாற்றுத்திற னாளிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அதுவும் 3 பேருக்கு மட்டும் வேலை தருகின்றனர். மற்ற நாட்களில் எங்களுக்கு வேலை தருவ தில்லை.

ஆனால், நாங்கள் வேலை செய்ததுபோல் எங்களது பணி அட்டை யில் கணக்கு வைத்து அவர்களாகவே கூலியை முழுவதும் பெற்று கொள் கின்றனர். தற்போது, கொரோனா பாதிப்பினால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாக நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, அதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி னர்.  இப்போராட்டத்திற்கு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் பீ.கே. மாரியப்பன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் கே.ஜி. கருவூரான், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ரஜினி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பென்னாகரம் பகுதிக் குழு உறுப் பினர் இடும்பன் உள்ளிட்ட முக்கிய நிர் வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;