tamilnadu

img

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: குளிக்க தடை நீட்டிப்பு

தருமபுரி:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.கர்நாடக-தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக் கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 93வது நாளாக குளிக்கவும் தடை நீடிக்கிறது. இதன் காரணமாக ஒகேனக் கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு 2 லட்சத்துக்கு மேல் நீர்வரத்து இருந்ததால் மெயின் அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டன. சுவர்களும் இடிந்து விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படவில்லை. நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தால் தான் ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும், அந்த சீரமைப்பு பணிகள் முடிந்தபிறகுதான் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க முடியும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

;