tamilnadu

img

பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி புறப்பட்டது

திருச்சிராப்பள்ளி, ஜன.21- 1948 ஆம் ஆண்டு தொழிலாளர்களை விசாரணையின்றி வேலை நீக்கம் செய்வது உள்பட கொடுமையான அடக்குமுறைகளை அன்றைய ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. அதனை எதிர்த்து பொன்மலை சங்க திடலில் 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று போராட்டம் நடத்துவதற்காக கூடிய ரயில்வே தொழிலாளர்கள் மீது வெள்ளையராட்சியின் போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராஜு, ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன், தங்கவேலு ஆகிய 5 தோழர்கள் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்கள். அந்த வீரத் தியாகிகளின் நினைவாக பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பொன்மலை சங்கத்திடலில் இருந்து சென்னையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டுக்கு செவ்வாய் அன்று புறப்பட்டது.    நிகழ்ச்சிக்கு டிஆர்இயு செயல் தலை வரும், சிஐடியு மாநில செயலாளருமான ஜானகிராமன் தலைமை வகித்தார். பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் எடுத்துக் கொடுக்க அதனை பயணக் குழுவின் தலைவர்கள் சிங்காரவேலு, ஐடா ஹெலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

பின்னர் பொன்மலை ஆர்மரிகேட் அருகே டிஆர்இயு சார்பில் ஜோதி பயண குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.   நிகழ்ச்சியில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, மணிமாறன், செல்வராஜ், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெரியசாமி, டிஆர்இயூ தலைவர்கள் மகேந்திரன், மனோகர், சந்தான செல்வம், கண்ணன், கரிகாலன், ராஜா, சிஐடி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் சம்பத், பன்னீர்செல்வம், கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகி ராஜ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதே போன்று தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழுவினருக்கு சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிஐடியு மாநகர் மாவட்ட நிர்வாகிகள் செல்வி, கணேசன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி: மறைந்த தோழர் பி.ராமலிங்கம் நினைவாக துணை  ஜோதி அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க பொதுச் செயலாளர் பால சுப்பிரமணியம் தலைமையில் புதுக்கோட்டை பொன்னமராவதி அரசு போக்கு வரத்து பணிமனையில் இருந்து பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட வழியாக புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா சென்றடைந்து. அங்கு வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதியில் இணைந்தது.  நிர்வாகிகள் பாலமுருகன், தீன், கண்ணன், ரவிச்சந்திரன், மணிவேல், செல்வராஜ், சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;