tamilnadu

img

நாகை அருகே கடல் சீற்றத்தால் சேதமான துறைமுகம்

தரங்கம்பாடி:
தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கடலோர மீனவர் கிராமங்களில் கடந்த ஐந்து நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சின்னங்குடி, மாணிக்கபங்கு,பெருமாள்பேட்டை, சந்திரபாடி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 2000 பைபர் படகுகள், 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர். மேலும் அம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடித் துறைமுகம் சேதமடைந்து படகுகள் மற்றும் கட்டுமரங்கள் இழுத்து செல்லப்பட்டுள்ளன. தகவலறிந்த பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பாதிப்புக்குள்ளான மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார். தரங்கம்பாடி மீன பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.

;