tamilnadu

img

அப்துல் வஹாப் மறைவுக்கு டியூஜே இரங்கல்

சென்னை, ஜன. 16- சிறந்த பத்திரிகையாள ரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் முதுபெரும் தலை வருமான தோழர் அப்துல்  வஹாப் மறைவுக்கு தமிழ்  நாடு யூனியன்ஆப் ஜேர்ன லிஸ்ட் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- தீக்கதிர் நாளேட்டை உரு வாக்கி வளர்த்தவரும் தமிழ கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஸ்தாபகரில் ஒரு வருமான அத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட தோழர் அப்துல் வஹாப் தனது 96 வது வயதில் செவ்வாயன்று (ஜன14) அதிகாலை கால மானார். தேனிமாவட்டம் , கம்பம் நகரில் ஒரு வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவரான வஹாப், அதன் சாயல் கொஞ்சம் கூட தெரியாமல் கம்யூனிஸ்ட் கட்சியில் பணி யாற்றினார். சுதந்திர போராட்ட வீரரான அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள்  முழுவதையும் அர்ப்பணித்த வர்.

ஆரம்ப காலத்தில் ஜன சக்தி பத்திரிகையிலும், பின்  னர் தீக்கதிரிலும் தனது முத்திரையை பதித்தார். தீக்க திரை வார இதழிலிருந்து தின சரியாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் ஏ. பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா ஆகியோருடன் மக்கள் பணியாற்றியவர்.     தமிழ்நாடு மாகாண கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணி யாற்றியவர். 1964ல் கும்ப கோணத்தில் நடந்த கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கவுன்சில் கூட்டத்தில் 32 தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உரு வாக்கியவர்களில் ஒருவர்  அப்துல் வஹாப். தமிழகத்தில் மார்க்சிய இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் மகத்தான பங்காற்றிய தோழர் வஹாப். அவரது மறைவு பத்திரிகை மற்றும்  முற்போக்கு அமைப்பு களுக்கு ஈடு செய்ய முடி யாத பேரிழப்பாகும். அவரது  மறைவுக்கு டியூஜே மாநி லக்குழு மற்றும் சென்னை  மாவட்டக்குழு சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரது மறைவால் வாடும்  மகன் யாகூப் மற்றும் மகள் கள், உறவினர்களுக்கும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்  கையில் தெரிவித்திருக்கி றார்.

;